திங்கள், அக்டோபர் 17, 2011

காரணம் விளங்குகிறதா ? (ட்ரஸ்டிகளின்) காரியம் விளங்குகிறதா ?


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ  

2:9. அல்லாஹ்வையும்> நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

 காரணம் விளங்குகிறதா ? (ட்ரஸ்டிகளின்)  காரியம் விளங்குகிறதா ?

ஜோதிடன் கூறுபவற்றை உண்மையென நினைப்பவன் நபியின் மீது இறக்கி வைக்கப்பட்ட (வேதத்)தை  நிராகரித்தவனாவான். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அபூதாவூது


உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பம் ஒன்றரை வருடமாக வறுமையில் வாடியக் காரணத்தினால் ஜோதிடரை அணுகி வறுமை நீங்குவதற்கான வழியைக் கேட்டுள்ளனர்.

அதற்கு 40 நாட்கள் குடும்பத்துடன் அஜ்மீர் தர்ஹாவில் தொடர் உண்ணாவிரதம் இருந்தால் வறுமை நீங்கிவிடும் என்று எதிர்காலத்தை கணித்து(?) ஜோதிடர் கூற அதை அப்படியே நம்பிய அந்த அப்பாவி குடும்பத்தினர் அஜ்மீர் தர்ஹா வாசலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.


அக்டோபர் 12 அன்று 39 வது நாளை நெருங்கியதும் மேல்படி குடும்பத்தினர் 12 பேரில் 16>22>23 வயதையுடைய வளர்ந்து வேர் விடக்கூடிய வாலிபக் குருத்துக்கள் அநியாயமாக கருகி மூர்ச்சையாகினர். மீதி 9 பேரும் கவலைக்கிடமாகி உயிருக்குப் போராடும் நிலையில் தர்ஹா ட்ரஸ்டிகளாகிய கல்நெஞ்சர்களால் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்( அந்த 9 பேரும் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை ).

அரை வயிறு> கால் வயிறு கஞ்சியை குடித்துக் கொண்டாவது காலத்தை ஓட்டி இருப்பார்கள் அஜ்மீர் ஷாகிபு அள்ளித்தருவார் என்றுக்கூறி அனுப்பிவைக்க அவரோ கொத்தும்> குலையுமாக அள்ளிக் கொண்டுப் போக வைத்து விட்டார்.   

வாசல் கதவருகே தாகத்தால் நாவறண்டு துடியாய் துடித்து மடிந்துப் போனவர்களை அஜ்மீர் ஷாகிபு காப்பாற்ற மறுத்தது ஏன் ?

தாகத்தின் மேலீட்டால் நாய் ஒன்று தனது நாக்கினால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த விபச்சாரி ஒருத்தி தனது காலுரையால் கிணற்றிலிருந்து தண்ணீரை நனைத்து அதன் வாயில்; ஊற்றி தாகத்தை தனித்த மனிதநேயச் செயலுக்காக அவளுடைய பெரும் பாவத்தை இறைவன் மன்னித்து விட்டதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி 3467

ஒரு விபச்சாரிக்கு நாலு கால் பிராணியின் மீது ஏற்பட்ட கரிசனம் கூட அஜ்மீர் சாஹிபுக்கு அவரை நம்பி வந்த அப்பாவிகளின் மீது ஏற்படாதது ஏன் ? 


இதற்கு முன்பு ஒருமுறை சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஏர்வாடி தர்ஹாவில் விடிய விடிய எரிந்து கரிக்கட்டையாகினர் அவர்களின் மரண ஓலம் விண்ணைப் பிளந்தது என்று பத்திரிகைகள் எழுதி இருந்தன. விண்ணைப் பிளக்கும் அளவுக்கு அவர்கள் எழுப்பிய மரண ஓலம் பக்கத்தில் படுத்துறங்கிய மஹானுடைய செவிப்பறையை தட்டாதது ஏன் ? அவர்களை காப்பாற்ற முன் வராதது ஏன் ? விண்ணை முட்டும் மரண ஓலத்தையே செவியுற சக்திப் பெறாதவர் மக்களின் மௌண வேண்டுதலை செவியுறுவாரா ? மக்கள் சிந்திக்க தயங்குவது ஏன் ? (இவருக்கு மனநல மருத்துவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு )

இன்று ஆஹா, ஓஹோ வென்று போற்றப்படுகின்ற நாகூர்  தர்ஹாவின் மினாராவை அன்று ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாக நீண்டகாலம் பயன்படுத்தி வந்தனர். அன்றைய மராட்டிய மன்னர்கள் ஆங்கிலேயர்களை கெஞ்சிக் கேட்டதால் கொடியை அகற்றினர். இதை கௌரவப் பிரச்சனையாக அந்த மஹான் எடுத்துக்கொள்ளாதது ஏன்?

18ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலியின் படை நாகூர் முழுவதும் கொள்ளையடித்து விட்டு இறுதியாக நாகூர் தர்ஹாவிற்குள்ளும் புகுந்து ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

நாகூர் முழுவதும் கொள்ளையடித்ததை தடுக்க முடியவில்லை என்றாலும் தான் துயில் கொள்ளும் கல்லரையில் திருடியதையாது தடுத்து நிருத்தலாமே ? அணையா விளக்கு என்ற சிறப்புப் பெயரும் இவருக்கு உண்டு. அணையாவிளக்கு அவர்கள் திருடும் போது மட்டும் அனைந்து விட்டதா ? 



தன் சொந்த வீட்டில் திருடியவனை மடக்கிப் பிடிப்பதற்கு திராணியற்றவர் அடுத்த வீட்டில் திருடும் போது மட்டும் பாய்ந்து பிடித்து விடுவாரா ? மக்கள் சிந்திக்க தயங்குவது ஏன் ? (காரணம் விளங்குகின்ற கோமான் என்ற சிறப்புப் பெயரும் இவருக்கே உண்டு ) ஆதாரம்: னுழனறநடடஇ வாந ஆயனசயள னுநளியவஉhநளஇ 1754-1765p. 146. ளுயதெயல ளுரடிசயஅயnலையஅஇ Pழடவைiஉயட நுஉழழெஅல ழக ளுழரவா ஐனெயை யனெ உழஅஅநசஉநஇ உயஅடிசனைபந. p.92

ஏன் ? ஏன் ? என்ற ஏராளமானக் கேள்விகளுக்கு ஒரே பதில் !

மண்ணோடு மண்ணாக மக்கிப் போனவர்களால் எதையும் செவியுற முடியாது, அதனால் எவற்றையும் தடுத்து நிருத்தவும் முடியாது.

அவர்களால் முயாது என்பதை 1400 வருடங்களுக்கு முன் திருமறைக்குர்ஆன் ஆணித்தரமாக முழங்கியதை கடந்த கால் நூற்றாண்டுகளாக ஏகத்துவ இமாம்கள் ஊர் தோறும் விளக்கிக் கூறியும்  ஏற்றுக் கொண்டவர்கள் போக மறுக்கும் மீதமுள்ளோர் மஹான்களின் மண்ணறை அருகே அவர்களால் காப்பாற்ற வக்கில்;லாமல் மடிந்துப் போன மேற்காணும் நம் கண் முன் நடந்த சம்பவங்களையாவது ஆதாரமாக எடுத்துக்கொள்ளடடும்.

22:73. மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும்> தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

இன்று ஆசியா கண்டத்தில் காணப்படும் ஏராளமான தர்ஹாக்களில் அடங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் அவ்லியாக்களில் அனேகருக்கு உண்மை வரலாறே கிடையாது என்பது தனி விஷயம். 

மக்கா வெற்றியின்போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கஃபத்துல்லாஹ்வின் சுவரில் இப்ராஹீம்(அலை) அவர்களும், இஸ்மாயில்(அலை)அவர்களும் அம்பெய்து குறிகேட்பது போன்று வரைந்துள்ள சித்திரத்தை பார்த்துவிட்டு இதுப்போன்று அவர்கள் ஒருக்காலும் இருந்ததில்லை இது அப்பட்டமான கற்பனை என்றுக்கூறியது இன்றைய அவ்லியாக்களை வானளாவப்புகழ்ந்து எழுதும் வரலாறுகள் அவர்களை வைத்து வயிறு வளர்க்கும் ட்ரஸ்டிகளின் அப்பட்டமான கற்பனை என்பதற்கு போதிய ஆதாரமாகும்.

காரணம் விளங்கியதாகக் கூறி கண்ணாடி பீரோலில் அடுக்கி வைத்திருக்கும் ஆனி, ஊசி எல்லாம் அப்பாவிகளை ஏமாற்றுவதற்காக அக்ரஹார(விக்ரஹ கலாச்சாரா)த்திலிருந்து காப்பியடிக்கப்பட்டவைகள்.

பிரசித்திப் பெற்றதாக கதை அளந்து விடும் எந்த தர்ஹாவிலும் காரணம் விளங்கவில்லை மாறாக அப்பாவிகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் தர்ஹா ட்ஸ்டிகளின்  காரியம் விளங்குகிறது.   

2:9. அல்லாஹ்வையும்> நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.


உணர்வுக்கு எழுதிய கட்டுரை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்