செவ்வாய், டிசம்பர் 20, 2011

மகரஜேதி ஒரு அப்பட்டமான செட்டப் !


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

 
மகரஜேதி ஒரு அப்பட்டமான செட்டப் !

கேரளாவில் நிலைப் பெற்றுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஹிந்துக்களிடம் பிரசித்திப் பெற்றதாக உள்ளதை அறிந்திருக்கிறோம்.

இந்தளவுக்கு இது பிரசித்திப்பெற்றதற்கு காரணமாக அமைந்திருப்பது ஒவ்வொரு ஜனவரி 14 லும் சபரிமலை உச்சியில் காட்சி அளிக்கும் மகரஜோதி தான். 

இது கடவுளின் புண்ணியத்தால் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக தாமாகத் தோன்றுவதாகக் கூறிப் பிரச்சாரம் செய்து வந்தனர். மக்களும் இதை நம்பி 48 நாட்களுக்கு விரதமிருந்து மாலை அணிந்து காலில் செருப்பில்லாமல் கரடு> முரடான மலையில் ஏறி ஐயப்பனை தரிசித்து விட்டு மகரஜோதியை கண்டு களித்து வந்தனர்.  

இது கடவுள் புண்ணியத்தால் காட்சி அளிக்க வில்லை இதை கோயில் நிர்வாகம் ஒருக் குழுவை மலை உச்சிக்கு அனுப்பிக் கற்பூரத்தை மூட்டை மூட்டையாய் கொட்டிக் கொளுத்தி காட்சி அளிக்கச் செய்கின்றனர் என்று கேரள பகுத்தறிவாளர்கள் குழு கேரளா முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

நாத்திகர்கள் கூறுவதை நம்பாதீர்கள் இது கடவுள் புண்ணியத்தால் தான் காட்சி அளிக்கிறது என்று மக்களிடம் கூறிப் பகுத்தறிவாளர்களின் பிரச்சாரத்தை கோயில் நிர்வாகிகள் முறியடித்து வந்தனர். 

1980ல் திருச்சூரிலிருந்து 24 பேர் கொண்ட பகுத்தறிவாளர்கள் குழு ஆர்.எம்.எஸ்.நாதன் தலைமையில் பொன்னம்பலமேடு மலை உச்சிக்கு சென்று மகரஜோதி எரியும் திசைக்கு நேர் எதிர் திசையில் நின்று மிகப் பெரிய தீப் பந்தத்தைக் கொளுத்தி இவ்வாறு தான் மகரஜோதி கொளுத்தி காட்சி அளிக்கச் செய்கின்றனர் என்று மக்களைத் தெளிவுப் படுத்த முயன்றனர். இதை முன்கூட்டியே அறிந்திருந்த கோயில் நிர்வாகம் அவர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.

எவ்வாறு மகரஜோதி கொளுத்தி காட்சி அளிக்கப்படுகிறது என்பதையும்> அதற்காக திரைமறைவில் தீட்டப்படுகின்ற ரகசியத் திட்டங்களையும் பட்டியலிட்டு புத்தகம் எழுதி ஆர்.எம்.எஸ்.நாதன் கோட்டயத்தில் வெளியிட்டார்.

1982ல் கேரளப் பகுத்தறிவாளர்கள் அமைப்பின் தலைவர் ஜோசப் எடமருகு அன்றைய முதல்வர் ஈ.கே.நயினாரை நேரில் சந்தித்து மகரஜோதி அப்பட்டமான செட்டப் என்பதை போதுமான ஆதாரங்களுடன் சமர்ப்பித்து அதை விசாரிக்க கமிசன் அமைக்கும்படி கோரிக்கை வைத்தார். ஆதாரங்களைப் பார்வையிட்ட நயினார் இது மனித ஏற்பாடு தான் என்பதை ஒத்துக் கொண்டு கமிசன் அமைக்க மறுத்து விட்டார்.

அதே ஆண்டு அவருடைய அனுமதியுடன் அரசின் கீழ் இயங்கும் மின்சாரத்துறை உழியர்களைப் பயன்படுத்தி பொன்னம்பல மேட்டிற்கு சென்று அங்கு எவ்வாறு மகரஜோதி கொளுத்தப்படுகிறது என்பதை புகைப்படம் எடுத்து பம்பாயிலிருந்து வெளிவரும் பிளிட்ஸ் 16-1-1982 இதழில் வெயிளிட்டனர்.

அதற்கடுத்து ஊடகங்களின் ஹீரோவாகிய தெஹல்கா சபரிமலை கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பத்தின் மூத்தவர் பி.ரவிக்குமாரை சந்தித்து அவர்களுடைய ஸ்டைலில் போட்டு வாங்கியதில் நாங்களே ஒருக்குழுவை நியமித்து மலை உச்சிக்கு அனுப்பி தொடர்ந்து மூன்று முறை கொளுத்தி காட்சி அளிக்க உத்தரவிடுவோம் என்றுக் கூறியதை தெஹல்காவின் 21-6-2008 இதழில் வெளியிட்டனர்.

எத்தனை ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்தாலும் அசைந்து கொடுக்க மறுத்த ஐயப்ப பக்தர்களின் கூட்டம் இந்த வருடமும் கட்டுக்கடங்காமல் போகவே மகரஜோதியைப் பார்வையிடுவதற்காக குழுமிய புல்மேடுப் பகுதியில் 104 பேரும்> பம்பாப் பகுதியில் 54 பேரும் நசுங்கி மாண்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி கேரள உயர்நீதிமன்;றம் வரை சென்றதால் திருவாங்;கூர் தேவஸ்தான போர்டுக்கு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

திருவாங்கூர் தேவஸ்தான சார்பில் வாதாடிய வழக்கறிஞர் டிஜி.பரமேஸ்வரன் மகரவிளக்கு கொளுத்துவது மனித ஏற்பாடு என்றும்> மகரஜோதி கடவுள் புண்ணியத்தால் வானின் நட்சத்திர ஒளியிலிருந்து காட்சி அளிக்கிறது என்றும் ஆனால் இது கடவுள் புண்ணியத்தால் தான் காட்சி அளிக்கிறது என்று தேவஸ்தானம் பிரச்சாரம் செய்யவில்லை என்றுக் கூறி இருக்கிறார். ( பொய் பேசி பிழைப்பு நடத்தும் தொழில் ஒன்று இந்தியாவில் இருக்கிறதென்றால் யூனிஃபார்ம் அணிந்த வக்கீல் தொழில் தான் என்பதற்கு இதுப் பெரிய எடுத்துக்காட்டாகும் )

இதையடுத்து திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகளை விளக்கமளிக்குமாறு நீதிபதிக் கூறியதும் தேவஸ்தான செய்தி தொடர்பாளர் ராகுல் ஈஸ்வர் கூண்டில் ஏறி சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் பொழுது ஒரு ஒளி படைத்த நட்சத்திரம் பிரம்மாண்டமாக காட்சி அளிப்பதாகவும் அது தான் மகரஜோதி என்றும் விளக்கமளித்தார்.

குறுக்குக் கேள்விகளைக் கேட்டு தொடர்நது தேவ்ஸ்தானத்தை தர்ம சவங்;கடத்தில் ஆழ்த்த விரும்பாத நீதிபதி இது அரசின் மெத்தனப் போக்கு என்றும் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததே விபத்திற்கு காரணம் என்றும் கூறி வழக்கை இறுக முடிச்சுப் போட்டு பரணிக்கு ஏற்றி விட்டார்.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் போது ஒரு நட்சத்திரம் ஒளிப்பிழம்பை கக்குவது கண்ணில் எண்ணையை ஊற்றிக் கொண்டு ஒவ்வொரு நொடிப் பொழுதும் வானிலையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாமல் போனது எப்படியோ ?

பக்தி என்றப் பெயரால் அப்பாவிகளிடம் சுரண்டும் கொள்ளை கும்பலை வளர்த்து ஆளாக்கியதில் அரசுக்கும்;> ஊடகத் துறைக்கும் கனிசமான பங்கிருந்தது என்பதற்கு மேற்காணும் சம்பவம் சான்றுப் பகர்கிறது.
இந்தியா சுதந்திரமடைந்து காட்டுவாசிகள் காடுகளிலிருந்து அப்பறப்படுத்தி காடுகளை காட்டு இலாக்காவினரிடம் ஒப்படைத்தப்பிறகு ஏற்கனவே சபரி மலைப் பகுதியில் பொன்னம்பலமேடுத் தொடங்கி மேற்கு மலைத் தொடர்ச்சி வரை வாழ்ந்த பழங்குடியினர் காட்டு மரங்ளால் தீ வளர்த்து இரவுப் பொழுதை கழித்து வந்ததுடன் கற்பூரக் குவியல்களால் மகரவிளக்கு எரித்து பூஜை செய்து வந்தப் பழக்கத்தை அவர்கள் அங்கிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்;டப் பின்னர் காட்டு இலாக்கா மற்றும் மின்சாரா இலாக்கா ஊழியர்களை விலைப்பேசி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் பதினெட்டாம்படி ஏறிவரும் தீபஆபரணப் பெட்டியை வாங்கி ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்களை அணிவித்ததும் வெடிக்கும் 21 சரவெடி தான் மகரஜோதி கொளுத்தி காட்சி அளிக்கச் செய்யும் சைகை.

ஒவ்வொருத் தடவையும் பகுத்தறிவாளர்கள் இதை நீரூபிக்கும்பொழுதெல்லாம் அதை முறியடிப்பதற்காக தேவஸ்தான நிர்வாகிகள் களமிறங்கி அது கடவுளின் அற்புத காட்சி என்றுக் கூறியவர்கள் இன்று நீதிமன்றத்தில் வழக்கறிஞரை விட்டு தேவஸ்தானம் அதுமாதிரி பிரச்சாரம் செய்ததில்லை இது மக்கள் நம்பிக்கை என்றுப் புளுக விட்டுள்ளனர். எது சத்தியம்> எது அசத்தியம் என்பதை மக்கள் நன்றாகவே விளங்கிக் கொண்டனர்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்