சனி, ஏப்ரல் 14, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
காலம் கடந்த ஞானோதயம்.
சென்னை உயர் நீதி மன்றக் கதவுகளை தட்டியது ஒரு விசித்திரமான வழக்கு விரைந்து கதவுகளைத் திறந்த நீதிமன்றம் திறந்த வேகத்தில் தள்ளி கதவுகளை தாழிட்டு மூடிக் கொண்டது.
என்ன தான் அந்த வழக்கு ?
சேலம் மாவட்டம் திண்டமங்கலத்தைச் சேர்ந்த பழநிச்சாமி என்பவர் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் நடைபெற இருந்த இன்னிசை நிகழ்ச்சியை திண்டமங்கலம் போலீஸார் அநியாயமாக தடுத்து நிருத்தி விட்டனர் போலீஸாரின் தடையை நீக்கி இன்னிசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறுக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இன்னிசை நிகழ்ச்சி என்ற பெயரிலும்> கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரிலும் போற்றுதலுக்குரியப் பெண்மையை இழிவு படுத்தும் விதமாக கூலிக்கு கூத்தாடிப் பெண்களை அழைத்து வந்து டப்பாங்குத்துப் பாடல்களை ஒலிக்கச் செய்து மோசமான அசைவுகளுடன் ஆடச் செய்வதால் அதை ரத்து செய்யும் அதிகாரம் போலீஸாருக்கு கண்டிப்பாக உண்டு அதிலும் குறிப்பாக அம்மன் கோயிலுக்கு முன்பாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது அம்மனை இழிவுப் படுத்துவதாகவும் அமையும் என்பதால் போலீஸாரால் தடைசெய்யப்பட்ட மேல்படி நிகழ்ச்சியை மீண்டும் நடத்த  அனுமதிக்க முடியாது என்றுக் கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
ஏகஇறைவனை எந்த ஓர் இடத்திலும் எவராலும் நிலை நிருத்த முடியாது.
மொத்த உலகுக்கும் இறைவன் ஒருவன் தான் அந்த ஓரிறைவனை மனிதர்கள் விரும்பும் ஒரிடத்தில் குடி அமர்த்த முடியவே முடியாது. அவன் தனி ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு தன் அளப்பெரும் ஆற்றலால் மொத்த உலகையும் கண் காணித்து இயக்குகிறான். 
இது போன்ற கோயில்கள்;> சர்ச்சுகள்> தர்ஹாக்கள் போன்ற குறிப்பிட்ட கட்டடங்களில் இறைவன் இருக்க மாட்டான் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் புரோகிதக் கூட்டம் இதை அறியாத அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கட்டடங்களை விரசத்தை விதைத்து காசை அறுவடை செய்யும் ''க்ளப்'' கள் போன்று மாற்றி விட்டனர்.
இறைசக்தி இருப்பது உண்மை என்றால் ?
மேல்படி கட்டடங்களுக்குள் இறைசக்தி இருப்பது உண்மை என்றால் அந்த சக்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கால்>கைகளை வளைத்துப்போடாமல் விடாது> ஆபாச நடனம் ஆடும் பெண்களின் இடுப்பை முறித்துப் போடாமலும் விடாது.
இது அசிங்கம் என்றும்> இது தீமை என்றும் ஐகோர்ட் நீதிபதிக்கு தெரியும் அளவுக்கு அம்மனுக்கு தெரியாமல் இருக்காது அதனால் அவைகள் வெறும் கட்டங்கள் தான் எந்த சக்தியும் அங்கு கிடையாது.  
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் தான் கூட்டம் கூடும்> கூட்டம் கூடினால் தான் உண்டியல் நிறையும். உண்டியல் நிறைந்தால் தான் ட்ரஸ்டிகளின் தொப்பை நிறையும் என்பதால் திட்டமிட்டே எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர்.
இன்றும் தமிழகத்தின் கடல்கரை ஓரங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் காரணம் விளங்குகின்ற கோமான்(?)களின் தர்ஹாக்களில் இதைவிட கேவலமான நிகழ்ச்சிகள் விமரிசையாக மஹான்(?)களின் முன்னிலையில் நடத்தப்படுகின்றன> மஹான்(?)களின் நல்லாசியுடன் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு பத்திரிகை அடித்து பகிரங்கமாக விநியோகிக்கின்றனர்.
மேல்படி விரசத்தைத் தூண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்ற கட்டடங்களுக்கு அருகே விபச்சாரங்கள் பல்கிப்பெருகி விட்டது என்பது கூடுதல் தகவல்.
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமா ?
உயர் நீதி மன்றம் போலீஸாருக்கு வழங்கிய ஆபாச நடனத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை அனைத்து ஊர் போலீஸார்களும் திண்டமங்கலம் போலீஸார் போல் தடுத்து நிருத்த முயற்சி செய்வார்களா ? மேல்படி ஆபாச நிகழ்ச்;சிகளின் ஏற்பாட்டாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவார்களா
கன்டிப்பாக தடுக்கவும் மாட்டார்கள்> ஒடுக்கவும் மாட்டார்கள் காரணம் கோயில் மற்றும் தர்ஹா ட்ரஸ்டிகளின் தொப்பையை விட போலீஸ் காரர்களின் தொப்பை பெரிதாக இருப்பதால் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் உள்ள உயர் நீதி மன்றம் வழங்கிய சலுகை குப்பைத் தொட்டிக்குப் போகவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
சிறந்த சமுதாயமாவது சிந்திக்குமா ?
உலகில் தோற்றுவிக்கப்பட்ட மொத்த சமுதாயத்திற்கும் முன்மாதிரி சமுதாயமாக முஸ்லீம் சமுதாயத்தை ஆக்கி இருக்கிறோம் என்று அல்லாஹ் தன் திருமறையில் நற்சான்று வழங்கி இருப்பதால் சிறந்த முஸ்லிம் சமுதாயமாவது இந்த தீமையை செய்யாமல் இருக்க முன் வர வேண்டும். 
நீங்கள் மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!... 3: 110.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்