ஏகஇறைவனின் திருப்பெயரால்....
கொள்ளை போகும் பத்மநாபசுவாமி
கோயிலில் உள்ள மக்கள் சொத்து.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
திருவனந்தபுரத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மா 17ம் நூற்றாண்டில் பாதாள அறைகளுடன் கூடிய பத்மநாபசுவாமி கோயிலை கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன.
திருவனந்தபுரத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மா 17ம் நூற்றாண்டில் பாதாள அறைகளுடன் கூடிய பத்மநாபசுவாமி கோயிலை கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன.
மேல்படி பாதாள அறைகளில் ஏராளமான தங்கம், வைரத்தினாலான விலை மதிக்க
முடியாத பொக்கிஷங்கள் குவியல் குவியலாக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட செய்திகளை அறிந்தோம்.
அவைகள் இன்னும் துல்லியமாக மதிப்பீடு செய்து முடிக்கப்படவில்லை
என்றாலும் சுமார் லட்சம் கோடியை தாண்டலாம் என்று தோரயமாக கணிக்கப்பட்டுள்ளன.
மேல்படி பொக்கிஷங்கள் அரசுக்கு உரியவை என்றும் மேல்படி கோயில் அரசின் கீழ் அறக்கட்டளை அமைத்து
செயல் பட வேண்டும் என்றும் கேரள உயர்நீதி
மன்றம் தீர்ப்பளித்தது.
கேரள உயர்நீதி
மன்றம் அளித்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த மன்னர் குடும்பம் இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்திற்கு
சொந்தமானவை என்றும், இக்கோயில் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
இது மன்னர் குடும்பத்துக்கு சொந்தமா ? அல்லது அரசுக்கு சொந்தமா ? என்பதை உச்ச நீதி மன்றம் முடிவெடுத்து
அறிவிக்க வேண்டும்.
நாளுக்கு
நாள் ஆபரணங்களின் விலை ஏறிக்கொண்டு செல்வதால்
தீர்ப்பு வெளியாகும் போதெல்லாம் அதன் மதிப்பு இதை விட பல மடங்கு
அதிகரித்திருக்கலாம்
ஆனால் பலமான பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் மேல்படி பொக்கிஷங்கள் சிறிது
சிறிதாக களவாடப்பட்டு
வருவதாக தகவல் வெளியாகி வருவதால் அப்பொழுது பொக்கிஷங்களின் எண்ணிக்கை இதை
விட பல மடங்கு குறைந்தே இருக்கும். அதனால் பொக்கிஷங்கள் அரசுக்கு வந்து
சேருவதற்குள் பொக்கிஷங்களின்
மதிப்பைத் தாண்டி விடலாம் அதற்கான பாதுகாப்பு செலவுகள்.
இதன் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டத் தொகை 41 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது
இதில் பொறுத்தப்பட்டுள்ள ரேடார் வசதி உள்ள கேராமாவின் விலை மதிப்பு மட்டும் 11 கோடி ரூபாயாம் ? மாநில முதல்வர் உம்மன் சான்டி
அவர்களே இதை நேரில் சென்றுத் திறந்து வைத்துள்ளார்.
கோயிலை ஒட்டியுள்ள கடைகள், நடைபாதை கடைகள் அனைத்தும் அப்புறப்
படுத்தப்பட்டு கோயிலின் நான்கு வாசல்களிலும் கமாண்டோ போலீஸார் நிருத்தப்பட்டு,
கோயிலைச் சுற்றியும்
24 மணி நேரமும்
ஆயுதம் ஏந்திய போலீஸார் ரோந்து சுற்றி வர ஏற்பாடு
செய்யப்பட்டு வயர்லெஸ் வசதியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாம்
?.
வம்சமே அழிந்து விடும் ?!
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரின் அறக்கட்டளையின்
கீழ் மேல்படி கோயில் நிர்வாகம் இயங்குவதால்
பொக்கிஷங்கள் இருக்கும் ரகசிய அறைகளை அவ்வப்பொழுது திறப்பதற்கும், மூடுவதற்கும் கோயில் நிர்வாகம்
தாராள அனுமதி அளித்து வந்ததையறிந்தே பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்தினர் மூலம் கடத்தப்படலாம்
என்று சந்தேகித்த மறைந்த சுந்தர்ராஜ் ஐயர் திருவனந்தபுரம் நீதி மன்றத்தில் பொது நலன்
வழக்குத் தொடர்ந்தார் அதன் பின்னரே கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து முன்னாள்
நீதிபதி எம்.என்.கிருஷ்னன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினரைக் கொண்டு கடந்த ஜூன் 27ம் தேதி ஐந்து அறைகள் திறக்கப்பட்டு
மேல்படி பொக்கிஷங்கள் கணக்கெடுக்கப்பட்டது.
ஆறாவது அறை திறந்தால் திறப்பவரின் வம்சமே அழிந்து விடும்
என்றும், நாட்டின்
பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் மூலவர் கடும் கோபத்தில் இருப்பதாக பிரசன்னத்தில்
தெரிவதாகக் கூறி 6வது அறையை திறக்க விடாமல் அரசுக்கு முட்டுக்கட்டை இட்டு வந்தனர் கோயில் நிர்வாகத்தினர்.
மன்னர் உத்திராடம் திருநாள் ஆறாவது அறையைத் திறந்து ஏராளமான
பொக்கிஷங்களை அள்ளிக்கொண்டுப் போவதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இரகசியமாக
கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றஞ்சாட்டி தேவபிரசன்ன மிரட்டலை பொருட்படுத்தாமல்
உடனடியாக ஆறாவது அறையைத் திறக்கச்சொல்லி அரசுக்கு ஆர்வமூட்டினார்.
இதன் பின்னரே தொல்லியல் துறை நிபுனர்களை வைத்து 6வது இரகசிய அறையைத் திறந்து
அதில் காணப்பட்ட பொக்கிஷங்களை அரசு அறிவித்தது.
ஆனால் அரசு இந்த அறையை திறப்பதற்கு முன்பே இந்த அறை இரண்டு முறை திறந்து மூடப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக உடன் இருந்த தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவித்தனர். (இதன் மூலம் மூலவர் கோபத்தில் இருக்கிறார் என்ற கரடியை அவிழ்த்து விட்டு அரசை தடுத்து நிருத்தி விட்டு இதன் இடைவெளியில் 6வது அறையை இரண்டு முறைத் திறந்து இயன்றளவு சுருட்டி உள்ளனர் என்பதும் தெளிவாகிறது. )
ஆனால் அரசு இந்த அறையை திறப்பதற்கு முன்பே இந்த அறை இரண்டு முறை திறந்து மூடப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக உடன் இருந்த தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவித்தனர். (இதன் மூலம் மூலவர் கோபத்தில் இருக்கிறார் என்ற கரடியை அவிழ்த்து விட்டு அரசை தடுத்து நிருத்தி விட்டு இதன் இடைவெளியில் 6வது அறையை இரண்டு முறைத் திறந்து இயன்றளவு சுருட்டி உள்ளனர் என்பதும் தெளிவாகிறது. )
பாயாச வாளிக்குள் வைத்து கடத்தல்.
இதுவல்லாமல் மன்னர் உத்திராடம் திருநாள் கோயில் தரிசனம்
முடிந்து திரும்பும் போது சில தடவை வாளியில் பாயாசத்தை நிரப்பி அவரே தன் கையில்
வீட்டுக்கு
எடுத்துச் செல்லும் போது அதில் மேல்படி பொக்கிஷங்களில் சிலவற்றை மறைத்து
எடுத்துச் செல்வது வழக்கமாக
இருந்து வந்திருக்கிறது இதைப் பார்த்த பூசாரி ஒருவர் மன்னரைத்
தட்டிக்கேட்டு இதனால் மன்னர் உத்திராடத்திற்கும் பூசாரிக்கும் சலசலப்பு
ஏற்பட்டு பரபரப்பு
செய்திகாக வெளி வந்தது.
200 தங்குக் குடங்கள் அபேல்.
இதுவல்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்கழி திருவிழாவுக்காக
200 தங்கக் குடங்கள்,
நகைகள் சி மற்றும் டி
அறைகளிலிருந்து எடுக்கப்பட்டு திருவிழா முடிந்தப் பிறகும் அவைகள் மீண்டும் அந்த அறைகளில்
வைக்கப்படாமல் இருந்துள்ளனர் கோயில் நிர்வாகிகள்.
சி மற்றும் டி அறைகளிலிருந்து திருவிழாவுக்காக கோயில்
நிர்வாகிகள் நகைகளை எடுப்பதை அறிந்த திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் அவற்றை
(சி மற்றும் டி அறைகளை)
மட்டும் கண் காணிப்பதற்கென்று இரண்டு வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை நியமித்திருந்தது.
மேல்படி 200 தங்கக் குடங்களையும் நகைகளையும் திருவிழா முடிந்தப் பின்னரும்
மீண்டும் அதை எடுத்த அறைகளில் வைக்க மறுத்த கோயில் நிர்வாகிகளுக்கும் வக்கீல்களுக்கும்
கடும் வாக்குவாதம் நடந்துள்ளது ஆனாலும் அவைகளை திரும்ப ஒப்படைக்க திட்டவட்டமாக மறுத்து
விட்டனர் கோயில் நிர்வாகிகள்.
கடுப்பாகிப் போன வக்கீல்கள் ஜனவரி 15க்குள் 200 தங்கக் குடங்களையும் நகைகளையும்
எடுத்த இடத்தில் மீண்டும் வைத்து விட உத்தரவிடவேண்டும் என்று திருவனந்தபுரம் மாவட்ட
சார்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு மனுவை விசாரித்த நீதிபதி பாபு பிரகாஷ்
ஜனவரி 13க்குள் அவைகளை எடுத்த அறைகளில்
மீண்டும் வைத்து விடவேண்டும் என்று உத்தரவுப்பிறப் பிறப்பித்தார். அதன் பிறகு அது என்ன ஆனது என்றே இதுவரை யாருக்கும்
தெரியவில்லை.
மதிப்பீட்டாளர்களால்
எனும் போர்வையில்...
பொக்கிஷங்களின் மதிப்பீட்டுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள
50 பேரில் 9 பேர் மேல்படி பொக்கிஷங்களை
கடத்துவதாக அவர்களை மதிப்பீட்டுப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று மதிப்பீட்டுக்
குழு தலைவர் வேலாயுத நாயர் 26-3-2012 அன்று உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதில் கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமாரும், தொல்பொருள் துறை இயக்குனர் ரெஜிகுமாரும் இணைந்து
திட்டம் வகுத்து பொக்கிஷங்களை கடத்துவதாக கருதுவதாகவும் பொக்கிஷங்கள் குவிந்துள்ள பாதாள
அறைகளின் சாவிகளை வைத்திருக்கும் கோயில் நிர்வாகிகளாகிய ரகு பிரகாஷ், சபரி வெங்கடாச்சலம்,
லெட்சுமி நாராயணன் மூவரும்
மேல்படி கடத்தல் காரர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் கூறி அவர்களையும் பணியிலிருந்து
மாற்றக் கோரி மதிப்பீட்டுக் குழு மற்றும் மேற்பார்வைக் குழுவின் அவசரக் கூட்டம் திருவனந்தபுரத்தில்
நடந்து அதில் இயற்றப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் மேல்படி மனுதாக்கல் உச்ச நீதி
மன்றத்தில் செய்யப்பட்டுள்ளது.
மேல்படி 9 பேரும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பது
இதன் பின்னர் ஆய்வு செய்த வகையில் அறிய வந்திருப்பதாக நுண்ணறிவு போலீஸார் கண்டு பிடித்துக்
கூறி உள்ளனர். (இத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டும் மதீப்பீட்டாளர்கள் எனும்
போர்வையில் கிரிமினல்கள் உள்ளேப் புகுந்து விட்டதை அறிய முடியாமல் கோடிக்கணக்கில் செலவு
செய்து பாதுகாப்புப் பணியை விஸ்தீரணப்படுத்தி அதைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கிறதோ
தெரியவில்லை ?).
விழலுக்கு இறைக்கும்
நீர் போல...
இந்த பாதுகாப்பு வசதிகளால் வெளியிலிருந்து கொள்ளையர்கள்
கோயிலுக்குள் நுழைந்து பொக்கிஷங்களை அள்ளிக்கொண்டுப்போக துணிய மாட்டார்கள் அதற்கு மட்டும்
தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பொருந்தலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் கோயில்
நிர்வாகிகளுக்கு, பொக்கிஷங்களின் மதிப்பீட்டாளர்களுக்கு, சாவிகளின் பொறுப்பாளர்களுக்கு,
மன்னர் குடும்பத்தினருக்கு
இது அறவேப் பொருந்தாது என்பதற்கு கேமராப் பொருத்தப்படுவதற்கு முன்பும், பொருத்தப்பட்டப் பின்பும்
நடந்த கடத்தல்கள் மற்றும் ( பாயாச வாளியில் மறைத்து எடுத்துச் செல்லும் ) சுரண்டல்கள்
சான்றாக அமைந்துள்ளது.
யார் இந்த பொக்கிஷங்களுக்கு உரிமைக் கோரினாலும் புதையல்கள்
நாட்டின் அரசுடமை என்பது உலகம் முழுவதும் பின்பற்றும் சட்டம் என்பதால் அதிலும் மன்னர் மார்த்தாண்ட
வர்மாவின் ஆட்சிக்குட்பட்ட அரசின் கருவூலங்கள் தான் மேல்படி பொக்கிஷங்கள் என்பதால் அது அரசுக்குத் தான் சேரும்.
மன்னர்களின் ஆட்சி காலத்தில் மக்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனையாக தங்க நாணயங்கள் தங்கத்திலான செப்புகள் , சிலைகளும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது அதனால் மேல்படி பொக்கிஷங்களில் அதிகமானவைகள் அபராதங்கள் மூலமாக மக்களிடம் வசூலித்தவைகளாகவும் இருக்கலாம் என்று அதிகமானோரால் கருதப்படுகிறது.
மன்னர்களின் ஆட்சி காலத்தில் மக்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனையாக தங்க நாணயங்கள் தங்கத்திலான செப்புகள் , சிலைகளும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது அதனால் மேல்படி பொக்கிஷங்களில் அதிகமானவைகள் அபராதங்கள் மூலமாக மக்களிடம் வசூலித்தவைகளாகவும் இருக்கலாம் என்று அதிகமானோரால் கருதப்படுகிறது.
பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு உரிமை கோரியவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பங்கு பிரித்துக்
கொடுத்ததைப் போன்று மேல்படி பொக்கிஷங்களுக்கு உரிமை கோரும் மன்னர் குடும்பத்திற்கு
பாதியைப் பிரித்து நீதிமன்றம் கண்டிப்பாக கொடுக்காது.
காலம் கடந்து ஒற்றை வரியில் இது அரசுக்கு சொந்தம் என்ற
தீர்பபை நீதிமன்றம் வாசிக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த மன்னர் குடும்பத்தினர்
மதிப்பீட்டாளர்கள் எனும் போர்வையில் நுழைந்திருக்கும் கிரிமினல்களுடனும், கோயில் நிர்வாகிகளுடனும் பேரத்தின்
அடிப்படையில் பொக்கிஷங்களை திட்டம் வகுத்து சிறிது சிறிதாக எரிந்த வீட்டில் உருவியது
மிச்சம் எனும் எண்ணத்தில் தொடர்ந்து கடத்தலாம்.
உள்ளுக்குள் உள்ளவர்கள் கடத்துவதை தடுக்க இந்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் அவ்வளாகப் பயன்படப்போவதில்லை என்பது மேற்காணும் நிகழ்வுகளின் மூலம் உறுதி
செய்யப்பட்டு விட்டதால் இதுவரை கடத்தியதுப் போக மீதமிருக்கும் பொக்கிஷங்களை உடனடியாக
விற்று இந்தியா உலக வங்கியில் வாங்கிய கடனை அடைத்து விட்டு தடுக்கப்பட்ட கோயில் நடைபாதை
வியாபாரிகளை மீண்டும் கடைகளை திறக்கச் சொல்லி உத்தரவிட்டு பாதுபாப்பபை அகற்றி விட்டால்
நல்லது இல்லை என்றால் இது அரசுக்கு விழலுக்கு இறைக்கும் நீர் போன்றதாகவே அமையும்.
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர்... திருக்குர்ஆன் 9:34.
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர்... திருக்குர்ஆன் 9:34.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ
وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ
الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத்
தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி
பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்